சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம் அண்மையில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஐ அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் இரண்டு வேரியண்ட் சேமிப்பு வசதியுடன் இந்திய சந்தையில் ரூ.59,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீனா வலைத்தளம்
சமீபத்திய தகவலின் படி, 10 ஜிபி ரேம் கொண்ட புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் இன் பெயர், சீன சான்றளிப்பு வலைத்தளமான டீனா(TENNA) வில் காணப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட் போன் இன் மாதிரி எண்ணுடன் PAFM00 பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10ஜிபி ரேம்
இந்த புதிய ஸ்மார்ட் போன் இன்மற்ற குறிப்புகள் அனைத்தும் முன்பு வந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்போலத்தான், பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இல் இருக்கும் ஒரே மாற்றம் ரேம் நினைவக திறன் விருப்பம் மட்டும், 8ஜிபி க்கு பதிலாக 10ஜிபி ரேம் கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ் புதிய வேரியன்ட்
கூடுதலாக, 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இன் படத்தை டிவீட் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.
ஒப்போ பைண்ட் எக்ஸ் விபரக்குறிப்பு:
- 6.4 இன்ச் ஓ.எல்.இ.டி எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- பெஸில் லெஸ் கர்வுடு கார்னிங் கொரில்லா 5 கிளாஸ்
- குவல்காம் ஸ்னாப் ட்ராகன் 845 ப்ராசஸர்
- 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்
- 25 மெகா பிக்சல் செல்பி கேமரா
- 16 மெகா பிக்சல் உடன் கூடிய 20 மெகா பிக்சல் டூயல் ஏ.ஐ கேமரா
- 3டி இமேஜ் இமோஜி
- 3730 எம்.ஏ.எச் பேட்டரி
- சூப்பர் வி.ஓ.ஓ.சி சார்ஜிங் டெக்னாலஜி
- 4ஜி டூயல் சிம்
- 4ஜி வோல்டிஇ
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- என்.எப்.சி
- யு.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
விலை : ரூ.59,999
Sent from my Nokia 7 plus using Tapatalk